2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் என பிரதமருக்கு இன்று (09) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைநகல் மூலமாக இந்த உத்தரவு பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் நாளை அது நேரடியாக கையளிக்கப்படவுள்ளது.

விவசாய அமைச்சின் கட்டடமொன்றைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக பிரதமருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X