Editorial / 2018 மே 01 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய 18 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருசில அமைச்சர்களுக்கு அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு, ஒருசில புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 18 அமைச்சுப் பொறுப்புக்களைத் தவிர, ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் அதே பதவிகளை வகிப்பார்கள் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை விபரம்
லக்ஷ்மன் கிரியெல்ல - பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி
மஹிந்த அமரவீர - விவசாயம்
எஸ்.பி.நாவின்ன - உள்விவகாரம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி
சரத் அமுனுகம - விஞ்ஞானம் தொழில்நுட்பம், ஆய்வு திறன்அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரியம்
துமிந்த திசாநாயக்க - நீர்வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
தலதா அதுகோரல - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
பைசர் முஸ்தபா - விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்
ரஞ்சித் மத்துமபண்டார - பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும்
கபிர் ஹாசிம் - பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி
பி.ஹரிசன் - சமூக அபிவிருத்தி
மனோ கணேசன் - தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்
சாகல ரத்நாயக்க - செற்றிட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி
டி.எம்.சுவாமிநாதன் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரம்
விஜித் விஜயமுனி சொய்சா - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியபொருளாதார அபிவிருத்தி
விஜயதாச ராஜபக்ஷ - உயர்கல்வி மற்றும் கலாசாரம்
ரவிந்திர சமரவீர - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விவகாரம்
சரத் பொன்சேகா - நிலைத்திருக்கும் அபிவிருத்தி, வனஜீரராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி
தயா கமகே - சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில்
52 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago