J.A. George / 2021 ஜனவரி 22 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை குறித்த குழு வழங்கவுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூப் பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வூப் பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதியால அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு மாதத்தில் ஜனாதிபதிக்கு குறித்த குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025