2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

இராகலை நடுநாயகனுக்கு கும்பாபிஷேகம்

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை நகரின் நடுநாயகனாக 60அடி உயரமான முருகன் சிலையுடன், 75அடி உயரமான கம்பீர இராஜ கோபுரத்துடனும் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம், இன்று(7) காலை இனிதே நடைபெற்றது.

இராகலை நடுக்கணக்கு கங்கையிலிருந்து, யானை மேல் புனித கும்பநீர்  ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு,  கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன்போது விசேட வானூர்தி மூலமாக கோவிலின் மீது மலர் தூவப்பட்டு வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக  வேத பாராயணங்கள் ஓதப்பட்டு பிரதான கும்பத்து நீர் ஏந்தி செல்லப்பட்டு கோவிலின் மூலமூர்திகள், பரிவார மூர்த்திகள்  உட்பட பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூசைகளுடன் தெய்வங்களுக்கு கண் திறப்பு நடத்தப்பட்டு, நடைதிறப்புடன் விசேட பூசைகள் இடம்பெற்று, பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில், நாடளாவிய ரீதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--