2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

தமிழர் விவகாரம்;கருணாநிதியின் கடிதத்துக்கு இந்திய பிரதமர் பதில்

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ஸவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், முகாம்களில் உள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாகவும், புதுடில்லி வந்த இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது என்றும் அந்தக் கடிதத்தில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி அந்நாட்டு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கலைஞர் கருணாநிதி கடந்த 6ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மன்மோகன்சிங் மேற்படி கடிதத்தினை கலைஞருக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறு  அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் முகாம்களில் உள்ள 47ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று மஹிந்த ராஜபக்ஸ உறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டுத் திட்டத்தின்கீழ் 50ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அந்த கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.  இதுதவிர இந்திய அரசு தனிப்பட முறையில், இடம் பெயர்ந்த தமிழர் குடும்பங்களை மீள்க்குடியமர்த்தி, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், அங்கு வாழும் அனைத்து சிறுபான்மையினரும், குறிப்பாக தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ஸவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X