2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

கல்லொழுவை அமானில் அடிக்கல்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 27 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மினுவாங்கொட கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள  கேட்போர் கூடத்துக்கு அடிக்கல் நாட்டும்  நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

 அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் ரியல் பௌஸின் சொந்த நிதியில் அன்பளிப்பாக இக்கட்டிடம் அமைய இருப்பதாக அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம் ஹாசிம் அடிக்கல் நாட்டும் உரையில் குறிப்பிட்டார். மேலும் அதிபர் தனது உரையில் தெரிவித்ததாவது;

 ஒரே நேரத்தில் 800 தொடக்கம் ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்தக் கேட்போர் கூடம் அமைய இருப்பதாகவும் இக் கட்டிடம் மூன்று மாடிகளைக் கொண்டதாக  இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இவ் நிகழ்வில் மினுவாங்கொட வலய கல்விப் பணிப்பாளர்   மல்வாராயிசி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ( தமிழ் மொழி) ஏ.ஏ.எம் ரிஸ்வி, கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் எம் முனாஸ்  மற்றும் பாடசாலை அதிபர் எம்.டி.எம் ஹாசிம், உப அதிபர் எம். ரிம்ஸான் எனப் பல முக்கியஸ்தர்களும், பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .