2020 ஜூலை 15, புதன்கிழமை

நெல் அறுவடை...

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டச் சிறுபோக நெல் அறுவடை விழா, புளுக்குணாவி நீர்ப்பாசனப் பிரிவின் முதலைமடுவட்டை -மாவடி முன்மாரி பகுதியிலுள்ள 13 விவசாயக் கண்டங்களின் விவசாயிகள் முன்மாரிப் பகுதியில், சம்பிரதாயபூர்வமாக நேற்று (29) நடைபெற்றது.

பட்டிருப்பு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சுபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா, மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலாளர் தேவகௌரி தினேஸ், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, கிழக்கு மாகாண நீரப்பாசனப் பணிப்பாளர் எந்திரி எஸ்.கணேசலிங்கம், மாகாண நீர்ப்பாசனப் பிரதிப் பணிப்பாளர் வீ.ராஜகோபாலசிங்கம் உட்பட பல அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

(படங்கள் - ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X