2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணம்..

Editorial   / 2020 மே 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அம்கோர் நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தால் மினிப்பே பிரதேச மக்களுக்காக சுமார் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் தலா 1,080 ரூபாய் பெறுமதியான 1,536 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இப்பொதிகள், மட்டக்களப்பிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, அம்கோர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ப.முரளிதரனால் மினிப்பே பிரதேச செயலாளர் திருமதி வத்சலா மாரம்பகேவிடம் கையளிக்கப்பட்டன. 

இதன்போது, அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சிவயோகராஜன், உதவி முகாமையாளர் பிறிஸ்லி றோய், திட்ட உத்தியோகத்தர் அ.செல்வக்குமார், உதவி பிரதேச செயலாளர் கீர்த்தி திஸாநாயக்க, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பௌத்த மதகுருமார் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

(படங்கள் - எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X