2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம்...

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் யாருவருக்கும் வீடு செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் அமைப்பப்பட்ட மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம், இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது..

யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு, ஊரெழுப் பகுதியில் “பொக்கணை” எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த மாதிரிக் கிராமத்தை, இன்று யாழுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ திறந்து வைத்து, 19 வீடுகளையும் உரிமையாளர்களிடம் கையளித்தார்.

இதன் போது வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுப் பத்திரங்களும் வீட்டு உபகரங்களும் மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .