2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வீதியில் நெல் உலரவிடும் விவசாயிகள்...

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் 63,000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது  மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லினை  சந்தைப்படுத்துவதற்காக  விவசாயிகள்  தமது ஈரப்பதமான நெற்களை உலரவிடுவதற்காக, பிரதான வீதிகள் உள்ளக வீதிகளை பயன்படுத்துவதால் போக்குவரத்துச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

போதியளவு நெல் உலரவிடும் தளம் இன்மையால் வீதியில் தாம் இவ்வாறு உலரவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில்,  திருக்கோவில்,  அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் , 6ஆம் கொலனி ஆகிய  பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள் மற்றும்  உள்ளக வீதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது. 

(படங்கள் - பாறுக் ஷிஹான்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .