2021 மார்ச் 03, புதன்கிழமை

விமான சேவை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இந்நிலையில், 02 விமான சேவைகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும்.

விமான நிலையப் புனரமைப்பு மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்துச் சேவைக்காக 317 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .