2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

ஹட்டனுக்கு வந்தது கரிக்கோச்சி...

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்‌ஷ

மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தெமோதரை நோக்கி, 9 ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த கரிக்கோச்சி எனப்படும் நிலக்கரி ரயில், ஹட்டன் ரயில் நிலையத்தை, நேற்று முன்தினம்(11) வந்தடைந்தது.

ரயிலுக்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதற்காகவே, இந்த ரயில், ஹட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில், 12 நாடுகளைச் சேர்ந்த 38 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.

ஹட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலை பார்வையிடுவதற்காக, அதிகமான மக்கள் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு, நேற்று முன்தினம் வருகைத் தந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .