Editorial / 2020 செப்டெம்பர் 08 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று(7) மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து ஒரு தொகுதி மஞ்சளுடன் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மஞ்சள் தொகையானது இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு நீர்கொழும்பு பிரதேசத்துக்கு வாகனமொன்றில் கடத்தி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார், சாந்திபுரம் பகுதியில் வைத்து சந்தேகத்துக்கு இடமான குறித்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார், உப்பு பக்கெற்றுக்களுக்கு மத்தியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகை 1379 கிலோ 960 கிராம் என தெரிவித்த மன்னார் பொலிஸார், மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தே நபரை கைதுசெய்துள்ளதாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.






27 minute ago
7 hours ago
9 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
7 hours ago
9 hours ago
17 Jan 2026