Editorial / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவின் பியொங்சங்கில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்குபற்றுவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், தாம் குற்றமில்லாதவர்கள் என நிரூபிக்கும் ரஷ்ய தடகள வீரர்கள் சுயாதீனக் கொடியொன்றின் கீழ் பியொங்சங்கில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறித்த தடகள வீரர்கள் ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்றவாறு பங்குபற்றமுடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவால் 2014ஆம் ஆண்டு சோச்சியில் நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பின்போது அரச ஆதரவுடனான ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்றது என்று கூறப்பட்டது தொடர்பான விசாரணையொன்றையடுத்தே மேற்குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த முடிவு ரஷ்யாவில் பரவலாக விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் சில அரசியல்வாதிகள் பியொங்சங்கில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்குமாறு கோரியுள்ளபோதும் குற்றமற்றவர்கள் போட்டியிடலாம் என்பதை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு விதித்துள்ள நிபந்தனைகளை ரஷ்யா மதிப்பளித்து நிறைவேற்றினால், பியொங்சங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கின் இறுதி நிகழ்வுக்கு முன்னதாக ரஷ்யா மீதான தடை நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
20 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago