2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அரையிறுதியில் பரிஸ் ஸா ஜெர்மைன், லயோன்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, பரிஸ் ஸா ஜெர்மைன், லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன.

டியோனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றிருந்தது.

இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோல் மூலமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த 12ஆவது நிமிடத்தில் டியோனின் முன்களவீரர் மெளனிர் செளயர் பெற்ற கோலின் கோலெண்ணிக்கையை டியோன் சமப்படுத்தியது.

இந்நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது.

இதேவேளை, இரண்டாவது பாதியின் ஐந்தாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைனின் பின்களவீரர் தியாகோ சில்வா பெற்ற கோலின் தமது முன்னிலையை இரண்டு கோல்களாக பரிஸ் ஸா ஜெர்மைன் அதிகரித்துக் கொண்டது.

தொடர்ந்து அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் பப்லோ சரபியா பெற்ற கோலின் காரணமாக பரிஸ் ஜெர்மைன் மூன்று கோல்களால் தனது முன்னிலையை அதிகரித்துக் கொண்டது.

பின்னர், போட்டியின் 86ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோல் மூலமாக தமது முன்னிலையை நான்கு கோல்களால் அதிகரித்துக் கொண்ட பரிஸ் ஸா ஜெர்மைன், போட்டியின் இறுதி நிமிடங்களில் பப்லோ சரபியா பெற்ற கோலின் மூலம் இறுதியில் 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற மர்ஸெய்யுடனான போட்டியில் ஹெளசெம் ஒளவார் பெற்ற கோலின் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே லயோன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.

இப்போட்டியில் லயோனின் முன்களவீரர் மூஸா டெம்பிலி செலுத்திய பெர்னால்டியை மர்ஸெய்யின் கோல் காப்பாளர் யொஹன் பீலே தடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .