Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலிய கிரான்ட் பிறிக்ஸில், ஹாஸ் அணியின் சுவிற்ஸர்லாந்து ஓட்டுநரான றொமைன் குறோஸ்ஜீனின் கார் பந்தயப் பாதையில் நின்றமையைத் தொடர்ந்ததான காலப் பகுதியில், மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனை முந்திய பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் குறித்த பந்தயத்தை வென்றார்.
மெல்பேணில் இன்று இடம்பெற்ற பந்தயத்தில் குறித்த சம்பவம் இடம்பெறும் வரைக்கும் லூயிஸ் ஹமில்டனே பந்தயத்தின் முன்னிலையிலிருந்த நிலையில் குறித்த சம்பவங்களின்போது முன்னிலையிருப்பவர்களுக்கு குறித்த சம்பவத்தைத் தொடர்ந்ததான காலப் பகுதி அநீதியிழைக்கின்றதா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நடப்பு போர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன் குறித்த சம்பவத்தின் பின்னரும் செபஸ்டியன் வெட்டலை முந்த முயன்றபோதும் அவரால் முடிந்திருக்கவில்லை. இறுதி சுற்றுக்களில் தனது வேகத்தை லூயிஸ் ஹமில்டன் இழந்த நிலையில், இரண்டாமிடத்தை தக்க வைப்பதை கவனத்திற் கொண்டு இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இப்பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த செபஸ்டியன் வெட்டலின் சக பெராரி அணி ஓட்டுநரான பின்லாந்தின் கிமி றைக்கோனன், றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோவை முந்த விடாம் தடுத்து மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
டானியல் றிச்சியார்டோ நான்காமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், செபஸ்டியன் வெட்டலைப் போன்று மேற்குறிப்பிட்ட சம்பவத்தால் நன்மையைக் பெற்றுக் கொண்ட மக்கலரென் அணியின் ஸ்பெய்ன் ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோ, பந்தயத்தின் முதற்பாதியில் 10ஆவது இடத்திலிருந்தபோதும் இறுதியில் ஐந்தாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
31 minute ago
50 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
50 minute ago
6 hours ago