2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

ஆறு மாதங்களுக்கு டெம்பிலி இல்லை

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான உஸ்மான் டெம்பிலி ஆறு மாதங்களுக்கு விளையாட முடியாமல் போயுள்ளது.

வலது பின்தொடைத் தசைநார் உபாதைக்காக பின்லாந்தில் நேற்று சத்திர சிகிச்சையொன்றுக்கு பிரான்ஸ் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீரருமான உஸ்மான் டெம்பிலி உள்ளானதன் மூலமே ஆறு மாதங்களுக்கு அவரால் விளையாட முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் உஸ்மான் டெம்பிலி காயமடையும் 10ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஆரம்பத்தில் கடந்தாண்டு நவம்பரில் உபாதைக்குள்ளாகி தேறிவந்த உஸ்மான் டெம்பிலிக்கு கடந்த வாரம் பயிற்சியின்போது மீண்டும் உபாதை ஏற்பட்டிருந்தது. இந்த உபாதை பார்சிலோனாவின் ஆரம்பப் பருவகாலத்தில் இடதுகாலில் உஸ்மான் டெம்பிலிக்கு ஏற்பட்டு சத்திர சிகிச்சையை மேற்கொண்டு ஐந்து மாதங்களுக்கு விளையாடாமல் இருந்திருந்தார்.

அந்தவகையில், ஸ்பானிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் விதிகளின்படி வீரரொருவரும் காயமடைந்து குறைந்தது ஐந்து மாதங்களுக்கு விளையாட முடியாமற் போகும் சந்தர்ப்பத்தில் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் காலப் பகுதிக்கு வெளியே ஸ்பானிய லா லிகா, ஸ்பானிய இரண்டாம் பிரிவுகளிலுள்ள வீரரொருவரையோ அல்லது கழகமொன்று வீரரொருவரையோ, உஸ்மான் டெம்பிலியின் மருத்துவ அறிக்கையை ஸ்பானிய கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்றுக் கொண்டால் பார்சிலோனா ஒப்பந்தம் செய்ய முடியும்.

இதேவேளை, உஸ்மான் டெம்பிலி ஐந்து மாத காலத்துக்கு விளையாட முடியாது என்பதோடு, புதிய வீரர் ஒப்பந்தம் செய்வதற்கு இணங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் சொஸைடட்டின் முன்களவீரரான வில்லியன் ஜொஸேயை ஒப்பந்தம் செய்ய முயல்வதாகக் கூறப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--