Editorial / 2017 ஜூன் 28 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் செரினா வில்லியம்ஸ், ஆண்களுக்கான போட்டியில் பங்குபற்றினால், 700ஆவது இடத்துக்கு அருகிலேயே தரப்படுத்தப்பட்டிருப்பார் என, டென்னிஸ் ஜாம்பவானான ஜோன் மக்என்ரோ தெரிவித்த கருத்துகளுக்கு, செரினா, பதிலளித்துள்ளார்.
கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் 7 பட்டங்களையும் இரட்டையர் பிரிவில் 9 பட்டங்களையும் வென்றவராவார்.
இந்நிலையில், தனது புதிய புத்தகத்தைப் பிரபல்யப்படுத்துவதற்காக, வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஜோன், செரினாவை, “சிறந்த பெண் வீரர். எந்தவிதக் கேள்வியும் இல்லை” என்று குறிப்பிட்டார். ஆனால், உலகில் தோன்றிய மிகச்சிறந்த வீரராக அவர் ஏன் கருதப்படக் கூடாது எனக் கேட்கப்பட்ட போதே, ஆண்கள் பிரிவில் விளையாடினால், 700ஆவது அளவில் அவர் தரப்படுத்தப்படுவார் என, ஜோன் பதிலளித்தார்.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்த செரினா, “அன்புள்ள ஜோன், நான் உங்களைப் போற்றுவதோடு மதிக்கிறேன். ஆனால் தயவுசெய்து, தரவுகளை அடிப்படையாகக் கொள்ளாத உங்கள் கருத்துகளிலிருந்து என்னை விடுவியுங்கள்.
“அங்கு’ தரப்படுத்தப்பட்ட எவரையும் நான் விளையாடியதில்லை, அதற்கான நேரமும் எனக்கில்லை. குழந்தையொன்றைப் பெற நான் உள்ள நிலையில், என்னையும் எனது தனிப்பட்ட உரிமையையும் மதியுங்கள். உங்களுக்குச் சிறந்த நாள் ஆகட்டும்” என்று தெரிவித்தார்.
35 வயதான செரினா வில்லியம்ஸ், இவ்வாண்டின் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரைக் கைப்பற்றியதோடு, அதன் பின்னர், தனது கர்ப்பம் காரணமாக, போட்டிகளிலிருந்து ஒதுங்கியுள்ளார். இதுவரை அவர், 23 கிரான்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
7 hours ago
9 hours ago