2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஒற்றை டெஸ்டில் பங்களாதேஷை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது.

இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43)

பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 5/55, மொஹமட் நபி 3/56)

ஆப்கானிஸ்தான்: 260/10 (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 87, அஸ்கர் ஆப்கான் 50, அஃப்ஸர் ஸஸாய் ஆ.இ 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 3/58, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/35, நயீம் ஹஸன் 2/61, தஜியுல் இஸ்லாம் 2/86)

பங்களாதேஷ்: 173/10 (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 44, ஷட்மன் இஸ்லாம் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 6/49, ஸகிர் கான் 3/59)

போட்டியின் நாயகன்: ரஷீட் கான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .