2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

‘ஒலிம்பிக்குக்கு இ-10 வழிவகுக்கும்’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற இ-10 வழிவகுக்கும் என இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளடக்கப்படுமா என்பதைக் கூற முடியாது என சங்கக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படுவது குறித்து கிடைக்கக்கூடிய நிதிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உறுப்பு நாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபை கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் கோரியிருந்தது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை உள்ளடக்குவதற்கு இ-10-ஐ பயன்படுத்துவதற்கான ஆதரவை இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவர் கெய்ல் ஆகியோரும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .