2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கடவுச்சீட்டு தொலைந்தது; பயணத்தைத் தவறவிட்டார் தசுன்

J.A. George   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இருபது 20 கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானகவின் கடவுச்சீட்டு தொலைந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் அவரால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை இலங்கை கிரிக்கெட் அணி நேற்று(22) ஆரம்பித்தது.

பயணத்துக்கான இறுதி ஆயத்தங்களின் போது, தசுன் ஷானகவின் கடவுச்சீட்டு தொலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சிக்கலைத் தீர்த்துக்கொண்டு, அவர் உடனடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .