2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

காயங்களால் அவதிப்படும் இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா காயங்களால் அவதிப்பட்டு வருகின்றது.

பெருவிரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அடுத்த போட்டியிலிருந்து சகலதுறைவீரர் இரவீந்திர ஜடேஜா விலகியிருந்தார்.

இந்நிலையில், பின்தொடைத்தசைநார் உபாதையுடன் ஹனும விஹாரியும், முதுகு உபாதையுடன் இரவிச்சந்திரன் அஷ்வினுமே மூன்றாவது டெஸ்டை பூர்த்தி செய்திருந்தனர்.

இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் அடிவயிற்றுப் பகுதி உபாதையைக் கொண்டிருப்பதால், நான்காவது டெஸ்டில் அவர் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

இதுதவிர, மாயங்க் அகர்வாலும் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

அந்தவகையில், ஜடேஜாவுடன், அஷ்வின் விளையாட முடியாது போகும் பட்சத்தில் குல்தீப் யாதவ் குழாமிலும், வலைப்பந்துவீச்சாளராக வொஷிங்டன் சுந்தரும் இந்தியக் குழாமுடன் காணப்படுகின்ற நிலையில் இவர்களிலொருவர் அணியில் தெரிவாகலாம்.

பும்ரா இல்லாத பட்சத்தில், ஷர்துல் தாக்கூர் அல்லது தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .