2020 ஜூன் 06, சனிக்கிழமை

குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டார் இம்ரான் தாஹீர்

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய தாஹீர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், குழாமிலுள்ள மற்றைய சுழற்பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்சியை மேலும் சோதிக்கும் பொருட்டே தாஹீர் குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது.

இத்தொடரின் இரண்டாவது போட்டி, பொச்சர்ஸ்போர்மில் இலங்கை நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X