Editorial / 2017 ஜூன் 27 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் பீபா கூட்டமைப்புகளின் (கொன்பெடரேஷன்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, நடப்பு உலகச் சம்பியன்களான ஜேர்மனி மற்றும் சிலி ஆகியன தகுதிபெற்றுள்ளன.
ஜேர்மனி, நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற தமது இறுதி குழுநிலைப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் கமரூனை வென்றமையைத் தொடந்தே, குழு பி-இல் முதலாவது அணியாக, கொன்பெடரேஷன் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஜேர்மனி சார்பாக, டிமோ வேர்னர் 2, கெரிம் டிமிர்பை 1 கோலைப் பெற்றனர். கமரூன் சார்பாகப் பெறப்பட்ட கோலை, லொஸோ அபுபக்கர் பெற்றிருந்தார்.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற மற்றைய குழு பி போட்டியில், சிலியும் அவுஸ்திரேலியாவும் மோதியிருந்தன. இதில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில், அவுஸ்திரேலியா சார்பாகப் பெறப்பட்ட கோலை, ஜேம்ஸ் ட்ரொய்சி பெற்றதோடு, சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை, மார்ட்டின் றொட்ரிகாஸ் பெற்றார். இதனையடுத்து, குழு பி-இல், இரண்டாவது அணியாக, அரையிறுதிப் போட்டிக்கு சிலி, தகுதி பெற்றது.
அந்தவகையில், இலங்கை நேரப்படி, நாளை (28) இரவு 11.30க்கு இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், குழு ஏ-இல் முதலிடம் பெற்ற சிலியை போர்த்துக்கல் சந்திக்கிறது.
நாளை மறுதினம் (29) இடம்பெறவுள்ள மற்றைய அரையிறுதிப் போட்டியில், குழு பி-இல் இரண்டாமிடம் பெற்ற மெக்ஸிக்கோவை ஜேர்மனி சந்திக்கிறது.
4 minute ago
15 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
23 minute ago