2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

டெனிஸ் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் நடால் முதலிடத்தில்

Super User   / 2010 ஜூன் 07 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் கிராண்ட்ஸ்லாம் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நாடல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரபேல் நாடல் 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ராபின் சோடர்லிங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதேவேளை, டெனிஸ் சர்வதேச தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த
ரபேல் நாடல் பிரான்ஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் முதலிடத்தைப் பெற்றார்.

5ஆவது தடவையாக பிரான்ஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தைக் நடால் கைப்பற்றியுள்ளார். பிரான்ஸ் கிராண்ட்ஸ்லாம் ஓபன்  நடைபெற்ற ரோலண்ட் கேரர்ஸ் மைதானத்தில் 38 முறை விளையாடியுள்ள நடால், ஒருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X