2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

டொட்டமுண்டை விட்டு விலகும் கோட்ஸே

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மத்தியகளவீரரான மரியோ கோட்ஸே, இக்கோடைப் பருவகாலத்தில் பொரூசியா டொட்டமுண்டிலிருந்து விலகவுள்ளதாக பொரூசியா டொட்டமுண்டின் விளையாட்டுப் பணிப்பாளர் மிக்கேல் ஸொர்க் தெரிவித்துள்ளார்.

பொரூசியா டொட்டமுண்டுக்காக 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையும், 2016ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையும் விளையாடியுள்ள மரியோ கோட்ஸே, இப்பருவகாலத்தில் ஐந்து புண்டெலிஸ்கா போட்டிகளையே ஆரம்பித்திருந்தார்.

2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுக்காக விளையாடிய மரியோ கோட்ஸே, 2014 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஜேர்மனிக்கு வெற்றிக் கோலைப் பெற்றுக் கொடுத்திருந்ததுடன், ஐந்து புண்டெலிஸ்கா பட்டங்களையும் வென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--