2019 டிசெம்பர் 06, வெள்ளிக்கிழமை

தொடரை 1-0 எனக் கைப்பற்றியது நியூசிலாந்து

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, ஹமில்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை வெற்றிதோல்வியின்றி முடித்திருந்ததன் மூலமே 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

நியூசிலாந்து: 375/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 105, டரைல் மிற்செல் 73, பி.ஜெ. வட்லிங் 55, றொஸ் டெய்லர் 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 4/73, கிறிஸ் வோக்ஸ் 3/83, சாம் கர்ரன் 2/63, ஜொவ்ரா ஆர்ச்சர் 1/75)

இங்கிலாந்து: 476/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 226, றோறி பேர்ண்ஸ் 101, ஒலி போப் 75 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 5/124, டிம் செளதி 2/90, மற் ஹென்றி 1/87, மிற்செல் சான்ட்னெர் 1/88)

நியூசிலாந்து: 241/2 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 105, கேன் வில்லியம்சன் ஆ.இ 104, ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 1/12, சாம் கர்ரன் 1/56)

போட்டியின் நாயகன்: ஜோ றூட்

தொடரின் நாயகன்: நீல் வக்னர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .