2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தப்பினார் செபஸ்டியன் வெட்டல்

Editorial   / 2017 ஜூலை 05 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸர்பைஜானில் இடம்பெற்ற கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், லூயிஸ் ஹமில்டனின் காரோடு ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக, போர்மியூலா வண் சம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் செபஸ்டியன் வெட்டல், மேலதிக நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என, சர்வதேச ஓட்டோமொபைல் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புக் காருக்குப் பின்னால் நின்ற போது, தனது சக மெர்சிடீஸ் சாரதியான ஹமில்டனின் காரோடு, வெட்டல் மோதியிருந்தார். இதனால் அவருக்கு, 10 செக்கன்கள் நிறுத்திச் செல்லும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மீளாய்வு இடம்பெற்ற நிலையில், தனது நடவடிக்கை தவறானது என ஏற்றுக் கொண்ட வெட்டல், அது தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கோருவதாகவும் அறிவித்த நிலையில், இவ்விடயம் இத்துடன் முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X