2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 03 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், வெலிங்டனில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். நியூசிலாந்து சார்பாக, கடந்த போட்டியில் விளையாடிய மிற்செல் சான்ட்னெரை மார்க் சப்மன் பிரதியிட்டதோடு, அவுஸ்திரேலியா சார்பாக, டேனியல் சாம்ஸை அறிமுகவீரர் றிலே மெரெடித் பிரதியிட்டிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, கிளென் மக்ஸ்வெல்லின் 70 (31), அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்சின் 69 (44), ஜொஷ் பிலிப்பின் 43 (27) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இஷ் சோதி, நான்கு ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு, 209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, அஸ்தன் அகரிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்து, 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மார்டின் கப்தில் 43 (28), டெவோன் கொன்வே 38 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அகர் நான்கு ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், மெரெடித் நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக அகர் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .