Editorial / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}


நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மெளன்ட் மகட்டரேயியில் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மிற்செல் சான்ட்னெர் ஆட்டமிழக்காமல் 63 (52), மார்டின் கப்தில் 50 (87), கொலின் டி கிரான்ட்ஹொம் 38 (40), லொக்கி பெர்கியூஸன் 19 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 224 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 37.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கமால் 63 (74), ஒய்ன் மோர்கன் 62 (63), ஜொனி பெயார்ஸ்டோ 37 (39), ஜொஸ் பட்லர் 36 ஆட்டமிழக்கமல் (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 2, கொலின் மன்றோ, லொக்கி பெர்கியூஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவானார்.
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago