2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பாக்கிஸ்தானுக்கெதிரான தொடரை வெல்லுமா தென்னாபிரிக்கா?

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, செஞ்சூரியனில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தானும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்ற நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக இத்தொடர் அமையவுள்ளது.

இந்நிலையில், தென்னாபிரிக்காவின் முக்கிய வீரர்களான குயின்டன் டி கொக், டேவிட் மில்லர், அன்றிச் நொர்ட்ஜே, ககிஸோ றபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்குக்கு (ஐ.பி.எல்) பயணமாகியுள்ள நிலையிலேயே இப்போட்டியை தென்னாபிரிக்கா எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த வீரர்களை ஜனமென் மலன், ஜெ.ஜெ. ஸ்மட்ஸ், பெயுரன் ஹென்ட்றிக்ஸ், ஜூனியர் டலா, லூதோ சிபமலா உள்ளிட்டோர் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, காயம் காரணமாக ஷடாப் கான் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற நிலையில் அவருக்குப் பதிலாக மொஹமட் நவாஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, டனிஷ் அஸிஸ், ஆசிஃப் அலிக்குப் பதிலாக ஹைதர் அலி, அப்துல்லா ஷஃபிக் ஆகியோர் விளையாடும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. தவிர, மொஹமட் ஹஸ்னைக்குப் பதிலாக ஹஸன் அலி விளையாடும் வாய்ப்பும் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X