2020 மே 29, வெள்ளிக்கிழமை

பார்சிலோனா, றியல் மட்ரிட் வென்றன

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா மற்றும் றியல் மட்ரிட், வலென்சியா உள்ளிட்ட அணிகள் வென்றுள்ளன.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற மல்லோக்ராவுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி மூன்று கோல்களையும், அன்டோனி கிறீஸ்மன், லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். மல்லோக்ரா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அன்டே புடிமார் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற அஸ்பன்யோலுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, ரபேல் வரான், கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற லெவன்டேயுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வலென்சியா வென்றது. வலென்சியா சார்பாக, கெவின் கமெய்ரோ இரண்டு கோல்களையும், ஃபெரான் டொரஸ் ஒரு கோலையும் பெற்றதோடு, ஒரு கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. லெவன்டே சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றோஜர் மார்ட்டி பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனாவும், றியல் மட்ரிட்டும் தலா 34 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் முதலாமிடத்தில் பார்சிலோனாவும், இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன. 30 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செவில்லா காணப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X