Editorial / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பரிஸ் செய்ன்ட் ஜேர்மா அணியின் புதிய ஒப்பந்தமான நேமர், தனது முன்னைய கழகமான பார்சிலோனாவின் பணிப்பாளர்கள் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "பார்சிலோனாவுக்கு, இதைவிடச் சிறப்பான விடயங்கள் கிடைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவின் நட்சத்திர வீரராகக் காணப்பட்ட நேமர், உலக சாதனைத் தொகையான 222 மில்லியன் யூரோக்களுக்கு, பரிஸ் கழகமான பரிஸ் செய்ன்ட் ஜேர்மாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தனது புதிய கழகத்துக்கான அறிமுகப்போட்டியில், 2 கோல்களைப் பெற்ற நேமர், 6-2 என்ற கோல் கணக்கில், தௌலோஸ் அணியை வீழ்த்துவதற்கு உதவியிருந்தார்.
போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், "நான் உண்மையைப் பேச விரும்புகிறேன். அவர்களிடம் (பார்சிலோனா பணிப்பாளர்கள்) நான் கவலையாக உள்ளேன். அங்கு நான், 4 ஆண்டுகளைச் செலவளித்தேன். நான் அங்கு, மிகவும் மகிழ்வாகவே இருந்தேன். தொடக்கத்தில் நான், மகிழ்ச்சியாக இருந்தேன். அழகான 4 ஆண்டுகளைச் செலவளித்து, மகிழ்வாகவே பிரிந்தேன்.
"ஆனால் அவர்களுடன் (பார்சிலோனா பணிப்பாளர்கள்) நான் மகிழ்வாக இல்லை. என்னைப் பொறுத்தவரை, அவர்கள் அங்கு இருக்கக்கூடாது. பார்சிலோனாவின் போக்குக்காக அவர்கள் இருக்கக்கூடாது. பார்சிலோனாவுக்கு, இன்னும் சிறப்பான விடயங்கள் கிடைக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகமுமே அதை அறியும்" என்று தெரிவித்தார்.
6 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago