2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

‘பிறீமியர் லீக்குக்கு திரும்ப பேல் விரும்பவில்லை’

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக்குக்கு திரும்ப ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரர் கரெத் பேல் விரும்பவில்லையென்றும், றியல் மட்ரிட்டிலேயே அவரது விளையாடும் காலத்தை முடித்துக் கொள்ளலாம் என அவரது முகவர் ஜொனதன் பர்னெட் தெரிவித்துள்ளார்.

றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸினடி ஸிடேனுடனான கரெத் பேலின் உறவானது சரியில்லை என்ற நிலையில் இங்கிலாந்து பிறீமியர் லீக்குக்கு அவர் மீண்டும் திரும்புவது குறித்து பேசப்பட்டிருந்தது.

கடந்த கோடைப்பருவகாலத்தில் ஏறத்தாழ சீனாவுக்கு கரெத் பேல் நகரவிருந்தபோதும் ஒப்பந்தம் முறிவடைந்திருந்தது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்குக்கு கரெத் பேல் மீண்டும் திரும்புவது குறித்து ஆண்டுக்கணக்காக கூறப்படுகின்ற நிலையில், அவரது முன்னாள் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் மற்றும் நியூகாசில் யுனைட்டெட்டுடன் அவர் இணைத்துக் கூறப்பட்டிருந்தார்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸிலிருந்து 2013ஆம் ஆண்டு றியல் மட்ரிட்டில் இணைந்த கரெத் பேல், 169 போட்டிகளில் 80 கோல்களைப் பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--