2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மீண்டும் அவுஸியில் சரித்திரம் படைக்குமா இந்தியா?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 14 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியானது, பிறிஸ்பேணில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வென்று சமநிலையில் காணப்படுகின்ற நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற போட்டியாக குறித்த போட்டி காணப்படவுள்ளது.

அந்தவகையில், கடந்த முறை அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது அவ்வணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணிக்கு மீண்டுமொரு தடவை அதனை நிகழ்த்துவதற்கான வாய்ப்பானது அஜின்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணிக்கு காணப்படுகின்றது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரஹானே, ரோஹித் ஷர்மா, செட்டேஸ்வர் புஜாரா ஆகிய ஒருவரின் நீண்ட இனிங்ஸ் அவசியமானதாகக் காணப்படுகின்றது.

மறுப்பக்கமாக, குறிப்பிட்ட வீரர்களுக்கெதிராக சோர்ந்து போயுள்ள அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுவரிசை எவ்வாறு செயற்படப்போகின்றது என்பதிலேயே தொடரின் முடிவு தங்கியுள்ளது.

இதுதவிர, அவுஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றினால், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா முன்னேறும். தவிர, இந்தியா வென்றால் இந்தியா இரண்டாமிடத்துக்கு முன்னேற அவுஸ்திரேலியா மூன்றாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .