Editorial / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயின் ஹராரேயில் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் பயிற்சிப் போட்டியொன்றில், 29 ஓட்டங்களால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி மேற்கிந்தியத் தீவுகளை ஆப்கானிஸ்தான் வென்றது.
மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், குல்படின் நைப் 48 (38), சமியுல்லா ஷென்வாரி ஆட்டமிழக்காமல் 42 (55) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 140 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 26.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், டவ்லட் ஸட்ரான் 4, ரஷீட் கான்ன், ஷரபுதீன் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago