2020 மே 29, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட்டிடம் தோற்றது சிற்றி

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.

மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், அன்டோனி மார்ஷியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் ஒட்டமென்டி பெற்றிருந்தார்.

இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றிருந்தது. எவெர்ற்றன் சார்பாக, டொமினிக் கல்வேர்ட்-லூயின் இரண்டு கோல்களையும், றிச்சர்லிசன் ஒரு கோலையும் பெற்றிருந்தனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை மட்டியோ கொவாசிச் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஏ.எஃப்.சி போர்ண்மெத்தின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-சம்பர்லின், நம்பி கெய்ட்டா, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற பேர்ண்லியுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன் இரண்டு கோல்களையும், லூகாஸ் மோரா, சண் ஹெயுங்-மின், மூஸா சிஸாகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X