Editorial / 2017 செப்டெம்பர் 05 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் பிறீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற போட்டியொன்று, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவின் செய்கைகளை ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றது.
பிரிட்ஜ்டௌணில் இடம்பெற்ற இந்தப் போட்டி, பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும் சென். கிற்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய, பொலார்ட் தலைமையிலான ட்ரைடென்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் டியோன் வெப்ஸ்டர் 32 (25) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கார்லொஸ் பிறத்வெய்ட் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தப்ராஸ் ஷம்ஸி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பட்ரியட்ஸ் அணி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 7 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 128 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணிக்கு ஓர் ஓட்டமே தேவைப்பட்டதோடு, 31 பந்துகளில் 97 ஓட்டங்களுடன் காணப்பட்ட எவின் லூயிஸுக்கு, சதத்துக்காக 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
எனினும், 8ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசிய பொலார்ட், அதை முறையற்ற பந்தாக வீசினார். அது, முறையற்ற பந்தாக அறிவிக்கப்பட்டிருக்கா விட்டாலும் கூட, அகலப்பந்து என அறிவிக்கப்படும் அளவுக்கு, அகலமாகவும் வீசப்பட்டது. நடுவர் அதை, முறையற்ற பந்து என அறிவிக்க, சதம் பெறுவதற்கான லூயிஸின் வாய்ப்பு இல்லாது போனது.
2010ஆம் ஆண்டு, இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இந்திய அணி ஓர் ஓட்டத்தைப் பெற வேண்டியிருந்த போது, விரேந்தர் செவாக்குக்கு, சதத்துக்காக ஓர் ஓட்டம் தேவைப்பட்டது. ஆனால், முறையற்ற பந்தொன்றை வீசிய ரந்தீவ், செவாக், சதம் பெறுவதைத் தடுத்தார்.
அதே நடவடிக்கையையே, தற்போது பொலார்க்கும் மேற்கொண்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
7 minute ago
33 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
39 minute ago
48 minute ago