2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ராஜினாமாவுக்குத் தயாராகிறார் மரடோனா?

Super User   / 2010 ஜூலை 05 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுநர் டியகோ மரடோனா தான் ராஜினாமாச் செய்யக்கூடும் என்பதை சூசமாகத் தெரிவித்துள்ளார்.

 

 உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரிலிருந்து ஆர்ஜென்டீன அணி வெளியேறிய பின்னர் ஞாயின்று அவர் தாயகம் திரும்பினார். ஆப்போது அவர் தனது “சுழற்சிவட்டம்” முடிந்துவிட்டது எனக் கூறியதாக ஆர்ஜென்டீன தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணிக்குத் தலைமை தாங்கியவரான மரடோன தனது எதிர்காலம் குறித்து தான் இன்னும் தீர்மானிக்கவில்லை எனக் கூறி ஒரு நாளின் பின்னர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட ஆர்ஜென்டீன அணி கால் இறுதிப்போட்டியில் ஜேர்மனியிடம் தோல்வியுற்று வெளியேறியது. எனினும் அவ்வணி ஞாயிறன்று தாயகம் திரும்பியபோது சுமார் பத்தாயிரம் ரசிகர்கள்கூடிநின்று அவ்வணி வீரர்களை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--