Editorial / 2020 மே 24 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான புண்டெலிஸ்கா தொடரில், வி.எஃப்.எல் வொல்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.
இப்போட்டியின் 32ஆவது நிமிடத்தில் சக முன்களவீரர் தொர்கன் ஹஸார்ட்டிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய பொரூசியா டொட்டமுண்டின் ரபேல் குரைரோ, தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
பின்னர் போட்டியின் 78ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய சக முன்களவீரர் ஜடோன் சஞ்சோவிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய பொரூசியா டொட்டமுண்டின் மத்தியகளவீரர் அஷ்ரஃப் ஹக்கிமி கோலாக்க அவ்வணி இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற ஐன்ரச்ட் ஃபிராங்பேர்ட்டுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றிருந்தது. பயேர்ண் மியூனிச் சார்பாக, லியோன் கொரெட்ஸ்கா, தோமஸ் மல்லர், றொபேர்ட் லெவன்டோஸ்கி, அல்போன்ஸோ டேவிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. ஐன்ரச்ட் ஃபிராங்பேர்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்டின் ஹின்டெரெக்கர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பொரூசியா மொச்சென்கிளட்பாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பயேர் லெவர்குசன் வென்றிருந்தது. பயேர் லெவர்குசன் சார்பாக கை ஹவெட்ஸ் இரண்டு கோல்களையும், ஸ்வென் பென்டர் ஒரு கோலையும் பெற்றனர். பொரூசியா மொச்சென்கிளட்பா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் துராம் பெற்றிருந்தார்.
35 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025