Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
நான்காம் நாள் ஆட்டமுடிவின்போது 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை பறிகொடுத்திருந்த இலங்கையணி ஐந்தாவது நாள் மதியநேர இடைவேளையின் பிற்பாடு சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக அதிகபட்சமாக டிமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக இரவிச்சந்திரன் 5 விக்கெட்களையும், அமித் மிஷ்ரா 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது முதல் இனிங்சில் 393 ஓட்டங்களையும், இலங்கையணி தமது முதல் இனிங்சில் 306 ஓட்டங்களை பெற்றதோடு, இந்திய அணி தமது இரண்டாவது இனிங்சில் எட்டு விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக இந்திய அணியின் லோகேஷ் ராகுல் தெரிவானார்.
இந்தப்போட்டியுடன் இலங்கையணியின் நட்சத்திரவீரர் குமார் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025