2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவுடனான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்க அணியுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

டர்பன் நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்றது. ரோஹித் சர்மா 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பௌண்ரிகள் உட்பட 53 ஓட்டங்களைப் பெற்றார்.சுரேஷ் ரெய்னா 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பௌண்டரிகள் உட்பட41 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மோர்ன் வான் வெய்க் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினார். 39 பந்துவீச்சுகளில் 5 சிக்ஸர்கள் 5 பௌண்டரிகள் உட்பட 67 ஓட்டங்களை அவர் குவித்தார்.

எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். வான் வெய்க்கிற்கு அடுத்ததாக ஜொஹான் போத்தா 25 ஓட்டங்களைப் பெற்றார். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களையே தென்னாபிரிக்க அணி பெற்றது.

ரோஹித் சர்மா இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் மெகாயா நிதினி இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .