2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து அணிக்கு 24 ஓட்டங்களால் வெற்றி

Super User   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நேற்று இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ்ரிட்டில்  இப்போட்டி நடைபெற்றது. மைதானம் ஈரமாக இருந்ததால் 41 ஓட்டங்களுக்கு இப்போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 41 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்டீவ் டேவிஸ் 67 பந்துகளில் 87 ஓட்டங்களையும் ஜொனதன் ட்ரொட் 78 பந்துகளில் 69 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சயீட் அஜ்மல் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 41 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களையே பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய கம்ரன் அக்மல் மாத்திரம் அரைச்சதம் கடந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் அண்டர்சன், பிரஸ்னன், ஸ்வான், யார்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஸ்டீவ் டேவிஸ் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி  1-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .