2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற இந்திய அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
 

இவ்வெற்றியின்  மூலம் இம்முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 103 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக யுவராஜ் சிங் 38 ஓட்டங்களைப் பெற்றார்.
 

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் திசேர பெரேரா 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை இதுவே முதல் தடவை ஆகும்.
 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
திலகரட்ன தில்ஷான் 35 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
 

அணித்தலைவர் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். 
 

திசேர பெரேரா இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--