2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை அணியை இலகுவாகக் கொள்ளவில்லை: இந்திய அணித்தலைவி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணியைப் பலவீனமாகக் கருதி இலகுவாக எடுத்திருக்கவில்லை என இந்திய அணியின் தலைவி மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அணியின் எல்லா வீராங்கனைகளும் நேற்றைய நாளில் பிரகாசிக்கத் தவறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 282 ஓட்டங்களைக் குவிக்க, இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது 251 ஓட்டங்களுக்கு மேல் பெற்றாலோ சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெறலாம் என்ற நிலை காணப்பட இந்திய அணி 144 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

பலமற்ற அணியாகக் கருதப்பட்ட இலங்கை அணியைத் தங்கள் அணி கருதியிருக்கவில்லை எனத் தெரிவித்த மித்தாலி ராஜ், ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மீது அதிக நம்பிக்கை காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை அணி 280 ஓட்டங்களைப் பெறுமென எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்த மித்தாலி ராஜ், இந்திய அணியின் பந்துவீச்சினை எதிர்கொண்டு அந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற முடியும் என எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்திற்கெதிரான போட்டியில் 272 ஓட்டங்களை இந்தியப் பந்துவீச்சாளர்கள் விட்டுக்கொடுத்திருந்த நிலையில், இலங்கைக்கெதிரான போட்டியில் 282 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தமை குறித்துத் தனது திருப்தியின்மையை வெளிப்படுத்திய மித்தாலி ராஜ், இங்கிலாந்திற்கெதிராக இறுதி நேரத்திலும், இலங்கைக்  எதிராக இரண்டாவது பவர் பிளேயிற்குப் பின்னர் அதிக ஓட்டங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X