2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல் சூதாட்டம்; ஐ.பி.எஸ் அதிகாரியின் பதவி நீக்கம் தொடர்பில் விசாரணை

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தின் முக்கிய தகவல்களை முதலில் வெளியிட்டவர் தமிழ் நாட்டை சேர்ந்த போலிஸ் அதிகாரி சம்பத் குமார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முக்கிய அதிகாரிகளும், வீரர்களும் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார். இவர் பின்னர் இட மாற்றம் செய்யப்பட்டு காரணங்கள் எதுவுமின்றி பதவியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். சில முக்கிய புள்ளிகளின் தலையீட்டின் மூலமே தனது பதவி இடை நிறுத்தம் இடம்பெற்றாதாக ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் தெரிவித்துள்ளார். இதேவேளை நீதிமன்றம் விஷேட அணி ஒன்றை இந்த விசாரணைகளுக்கு அமைக்க வேண்டும் என கோரியுள்ள அதேவேளை தனது பதவி நீக்கம் தொடர்பிலும் நீதிமன்றில் முறையீடு செய்துள்ளார். ஏப்ரல் 16 ஆம் திகதி விசாரணையில் இந்த விடயமும் நீதிமன்றில் எடுக்கபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சம்பத் குமார் ஆரம்பத்தில் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் தமிழ் மிரர் வெளியிட்ட செய்தி
டோனி  சூதாட்டத்தில் ஈடுபட்டார் - இந்திய சஞ்சிகை செய்தி

டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளாதாக பொலிஸ் அதிகாரி ஒருவரின் அறிக்கையை மையமாக வைத்து தமிழக சஞ்சிகை ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் நேரடியாக அவர் ஈடுபாட்டாரா? என்பது குறிப்பிடப்படவில்லை. பொலிஸ் விசாரணைகளின் போது பந்தய தரகர் ஒருவர் இந்த தகவலை குறிப்பிட்டதாக விசாரணைகளை மேற்க்கொண்ட போலிஸ் அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் டோனி தொடர்பாக சந்தேகம் எழுப்பும் அறிக்கை இவ்வாறே அமைந்துள்ளது.

'கடந்த 2013-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இரவு விருந்தில் கிட்டி கலந்துகொண்டபோது அவரிடம் பேசிய விக்ரம் அகர்வால், 'ஒரு பெரிய டீல் ஓகே ஆகிவிட்டது. நடைபெறப்போகும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில், சென்னை தோற்கும்' என்று சொல்லியுள்ளார். விருந்து முடிந்த பிறகு கிட்டி, குருநாத் மெய்யப்பன், விக்ரம் அகர்வால் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெய்ப்பூரில் உள்ள சஞ்சீவ் என்பவருடன் குருநாத் மெய்யப்பன் போனில் பேசியுள்ளார். 'பிளான்படி 140 ரன்கள் மட்டும் எடுத்துவிட்டு, போட்டியிலும் தோற்றுவிடுவதாக டோனி சொல்லிவிட்டார். எனவே எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லியுள்ளார்.' இந்த தகவலை பொலிசில் சரணடைந்த பந்தய தரகர் ஹரிஷ் பஜாஜ் கூறியிருந்தார்.

இதை அடிப்படையாக வைத்து முழுமையாக டோனி சூதாட்டத்தில் ஈட்டுபட்டார் என்ற முடிவுக்கு வருவது கஷ்டம். வெறும் வாய் வார்த்தைகளாள் ஒருவர் சொன்னார் என்ற அடிப்படையில் முடிவுக்கு வர இயலாது. ஆனாலும் இந்த வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை. மறைக்கப்படுகின்றது என இந்த அறிக்கையை வெளியிட்ட போலிஸ் அதிகாரி சம்பத்குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அகப்பட்டுக்கொண்டவர்கள் ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி மாட்டிவிடும் செயற்ப்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பிரச்சினையும் அவ்வாறு அமைய வாய்ப்புக்கள் உள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .