2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

அதிரடிப்படையினரால் இருவர் மடக்கிப்பிடிப்பு

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து, ரீ – 56 ரகத் துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள், மகஸின் என்பனவற்றோடு, இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனுமிடத்திலிருந்து அதே பொலிஸ் நிர்வாகப் பிரிவில் உள்ளடங்கும் வாழைச்சேனை, கறுவாக்கேணி பகுதிக்கு மேற்படி ஆயுதத்தையும் தோட்டாக்களையும் எடுத்துச் செல்லும்போது வழிமறித்த விஷேட அதிரடிப்படையினர் ஆயுதங்களையும் கைப்பற்றி, இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

நேற்று (11) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், வாழைச்சேனை 2ஆம் குறுக்கு விநாயகபுரம் கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர்கள் இருவரே  விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .