Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவோர் இதுவரையில் பொருளாதாரத்தில் அடி மட்டத்திலேயே காணப்படுகின்றனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பாளர்
ஏ.எல்.எம்.சத்தார் தெரிவித்தார்.
சர்வதேச புலம்பெயர் தினம் டிசெம்பர் 18ஆம் திகதி அனுஷ்டிக்கபடுவதை முன்னிட்டு மட்டக்களப்பு எகட், கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு புளியந்தீவு சிட்டிக்காட்டிக்கல் நிலையத்தில் நேற்று நடத்தப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பைப் பெற்று புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களுக்கே இந்த நிகழ்வு நடத்தப்பட்டது,
இங்கு அவர் மேலும் கூறுகையில், 'மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பைத் தேடிச் செல்லும் ஆண்களுக்கான பயிற்சி 40 நாட்களும் பெண்களுக்கான பயிற்சி 05 நாட்களும் கொண்ட இத்திட்டத்தில் பெண்களின் வயதெல்லை 25 ஆகவும் ஆண்களுக்கான வயதெல்லை 19 ஆகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் மொழிகள், சட்ட
திட்டங்கள், சவால்களுக்கு முகம் கொடுத்தலும் தீர்த்தலும் பற்றியும் மற்றும் தொழில் சார் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
1985ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலமும் அல்லது அனுமதி பெற்ற தொழில் வழங்குநர்கள் மூலமும் சரியான தகவல்களைக் கொடுத்து அனுப்பப்படும் தொழிலாளர்கள் எவராவது மரணிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நட்டஈடாக தலா ரூபாய் 500,000 வழங்கப்படும். மாறாக, பிழையான தகவல்கள் கொடுத்து செல்பவர்களினால் குறித்த இழப்பீட்டுத் தொகையைப் பெறமுடியாது. முகவர்கள் தவறிழைக்கும்போது புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு
பாதுகாப்பான புலம்பெயர்வு மனித வியாபாரத்தைத் தடுக்கும்' என்றார்.
மேலும், பாதுகாப்பற்ற புலம்பெயர்தலினால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையேயான புரிந்துணர்வின்மையினால் ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் 'மனமே மாறிவிடு' எனும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago