2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'அபிவிருத்திக் கூழுக் கூட்டங்களில் கல்வி அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கோட்டக் கல்வி அதிகாரிகளும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற கூட்டத்தின்போது ஏறாவூர் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலந்து கொள்ளவில்லை என்பதுடன், அவர் கலந்துகொள்ளாமைக்கான காரணத்தைக் கூற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பதில் கல்விப் பணிப்பாளர் எம்.இஸ்ஸதீன்  தெரிவிக்கையில்,  'மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதன் காரணமாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கான அழைப்பு உரிய நேரத்துக்கு எனக்கு கிடைக்கவில்லை. அதனால் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை' என்றார்.

இதனை அடுத்து, மேற்படி தீர்மானத்தை இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .