2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

’அமைச்சரவை மாற்றம்; முரண்பாடு ஏற்படுமென எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 மே 23 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பேரின்பராஜா சபேஷ்

நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போது  மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் காரணமாக  ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பாரிய ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அமைச்சரவையில் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'ஜனாதிபதியும்  பிரதமரும் பாரிய இணக்கப்பாட்டுடன் மேற்கொண்டுள்ள இந்தப் புதிய மாற்றமானது, நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்குடன்   பொறுப்புகள்  கையளிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும்  அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையின் மூலமாக நாட்டில் முஸ்லிம்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுபான்மையினமாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக  உள்ளது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .